முப்படைகளின் வீரர்களும், நாட்டுக்காக எந்த தியாகமும் செய்வதற்கு தயாரான மனநிலையில் உள்ளனர்,” என, ஐ.டி.பி.பி எனப்படும், இந்தோ – திபெத் எல்லை காவல் படை தலைவர், எஸ்.எஸ்.தேஸ்வால் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய , தேஸ்வால் : லடாக் பகுதியில், பிரதமர், மோடி சமீபத்தில் சென்று, ராணுவ வீரர்களிடம் பேசினார். அவரது பேச்சு, ராணுவ வீரர்கள் மத்தியில், பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நாட்டுக்காக எந்த தியாகத்தையும் செய்யும் மன நிலையில், உறுதி யுடன் ராணுவத்தினர் உள்ளனர. ராணுவம், விமானப்படை, கடற்படை, துணை ராணுவ படை என, அனைத்து பிரிவு வீரர்களும், நாட்டுக்காக பணியாற்றுவதில் பெருமையுடன் உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.