கடந்த மாதம் 15 ஆம் தேதி இந்திய-சீன படைகள் இடையே மோதல் வெடித்தது இதன் காரணமாக எல்லைப் பகுதில் இதையா இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்திய போர் விமானங்கள் எல்லை பகுதியினில் வட்டமிட தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி எல்லைக்கு சென்று இராணுவ வீரர்களுடன் உரையாடினார். இதன் காரணமாக சீனப் படைகள் 2 கிமீ தூரம் பின் வாங்கி சென்று விட்டதாக மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
ஜூன் 15ம் தேதி கிழக்கு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் எய்தினர், சீன படையினருக்கும் உயிரிழப்புகள் அதிகம், ஆனால் சீனா அதிகாரப் பூர்வமாக எந்தத்தகவலையும் இதுவரை இது தொடர்பாக வெளியிடவில்லை.ஆனால் ஜூன் 15ம் தேதி இருதரப்பினருக்கும் நடந்த இந்த மோதலைத் தொடர்ந்து இருதரப்பிலுமே தற்காலிக கட்டமைப்புகளை எல்லைக்கருகே உருவாக்கினர். சீனாவுடன் கண்ணுக்குக் கண் சந்திக்கும் நிலையில் இந்தியப் படைகளும் இருந்தது
இந்நிலையில் ஜூன்30ம் தேதி கமாண்டர் மட்ட பேச்சுவார்த்தைகள் இருதரப்புக்கும் இடையே நடந்தன. இந்த பேச்சுவாரத்தைகளில் சீனா மேற்கொண்ட வாக்குறுதிகளின் மீது செயல்பட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.“கல்வான் பள்ளத்தாக்கில் சண்டை நடந்த இடத்திலிருந்து 2 கிமீ தூரம் சீனப் படைகள் பின்னால் சென்றுவிட்டது. இது தொடர்பாக அந்த இடத்துக்கே சென்று சரிபார்க்கப்பட்டது” என்று மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.