இந்தியா டுடே இதழ் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தேசத்தின் மனநிலை (Mood of the nation) என்ற கருத்துக் கணிப்பை நடத்தி வருகிறது. அதே போல் அண்மையில், இந்தியா டுடே குழுமமும், கார்வி இன்சைட் நிறுவனமும் இணைந்து ( ஜூலை 15 2020 முதல் ஜூலை 27 2020 வரை ) ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதன் படி, ஒரு பிரதமராக மோதியின் செயல்பாடு எப்படி என்ற கேள்விக்கு மிகச் சிறந்தது (Outstanding) என்று 30% பேரும் நன்று (Good) என்று 48% பேரும் சராசரி (Average) என்று 17% பேரும் மோசம்(poor) என்று 5% பேர் கூறியிருக்கிறார்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
அதாவது 78%பேர் சிறந்தது என தெரிவிக்கின்றனர். மோசம் என தெரிவித்தவர்கள் வெறும் 5 சதவிகிதம் பேர்தான்.
இந்தியாவின் ஆகச் சிறந்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கு 44% பேர் மோதி எனத் தெரிவித்துள்ளனர். இரண்டாவது இடத்தை 14%, விழுக்காடுடன் வாஜ்பாயும் மூன்றாவது இடத்தை 12% விழுக்காடுடன் இந்திராவும் பெற்றுள்ளனர், நேரு 7%, மன்மோகன் 7% ராஜிவ் 4%. பொதுவாக இரண்டாவது இடத்தை இதுவரை இந்தியாதான் பெற்று வந்தார்.
அந்த நிலை இப்பொது மாறியுள்ளது. அதுமட்டுமல்ல, சென்ற ஜனவரி 2020 கருத்துக் கணிப்பைவிட முடிக்கான ஆதரவு 10% விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த பிரதமராக இருக்க மிகப் பொருத்தமானவர் யார்? என்ற கேள்விக்கு
: 66% விழுக்காடு மக்கள் நரேந்திர மோதி என்றே தேர்வு செய்துள்ளனர்.
ராகுல் காந்தி: 8%, சோனியா காந்தி: 5%. ஜனவரியில் 2020 ல் நடைபெற்ற இதே கருத்துக் கணிப்பில் அடுத்த பிரமராக இருக்கப் யார் பொருத்தமானவர் என்ற கேள்விக்கு நரேந்திர மோதிக்கு ஆதரவாக 53 சதவீதம் பேரும், ராகுலுக்கு ஆதரவாக 13 சதவீதம் பேரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இப்போது ராகுல் ஒற்றை இலக்கத்திற்குப் போய்விட்டார். மோதிக்கான ஆதரவு 15% கூடியுள்ளது
கொரோனா தொற்றை எப்படி மோடி எதிர் கொள்கிறார் என்ற கேள்விக்கு 77 விழுக்காடு மக்கள் திருப்தியாக இருப்பதாக பதில் அளித்துள்ளனர். இதில் 48 விழுக்காடு பேர் மிகவும் நன்றாக கையாள்வதாக தெரிவித்துள்ளனர்.
அதே போல் பொருளாதாரத்தை மோடி நன்றாக கையாள்கிறார் என்று 72 விழுக்காடு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீனாவை நம்ப வேண்டாம் என 84 விழுக்காடு மக்களும் சீனா பொருட்கள் மீதான தடை தேவை என 91 விழுக்காடு மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய நிலையில் பொதுத் தேர்தல் நடந்தால் பாஜக தனியாக 283 இடங்களை வெல்லும் என்றும் காங்கிரஸ் 49 இடங்களை மட்டுமே வெல்லும் என்றும் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது
இந்த கருத்துக் கணிப்பிற்கு 12021 பேரிடம் பேட்டிகள் மூலமாகத் தகவல் திரட்டப்பட்டது. எப்போதும் நேரில் சென்று காணப்படும் நேர்முகம் இம்முறை கொரானா காரணமாகத் தொலை பேசி மூலம் நடத்தப்பட்டது.
பேட்டி காணப்பட்டவர்களில் 67 சதவீதம் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள். 33 சதவீதம் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள்.
ஆந்திரம், அசாம், பிகார் சட்டீஸ்கர், டெல்லி, குஜராத் ஹரியான, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா,பஞ்சாப், ராஜஸதான், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்களில் உள்ள 97 மக்களவைத் தொகுதிகள், 194 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த நேர்காணல்கள் நடத்தப்பட்டன. முடிவுகளிலிருந்து
இந்தக் கருத்து கணிப்பு பாஜக நகர்ப்புற கட்சி என்ற பிரச்சாரத்தை முறியடித்தது மட்டுமல்லாமல், உயர்சாதி வகுப்பினர் கட்சி என்ற பிரச்சாரத்தையும் கூட முறியடித்துள்ளது.
பாவம், மோடி எதிர்ப்பாளர்கள், இந்த கருத்துக் கணிப்பின் விவரங்களை படிக்க வேண்டும் எனில் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக்க கொண்டுதான் அவர்கள் படிக்க வேண்டும்.
முழு விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்